ஷார்ப்ட்ரானிக்ஸ் உரிமையாளர் இல்ல திருமண விழா* சேலம், பிப்.9

Posted by Sharptronics India on


ஷார்ப்ட்ரானிக்ஸ் உரிமையாளர் திரு.மணிஷ்தக்கர்- திருமதி.சசிரேகா தம்பதியின் மகள் ஸ்ருதி தக்கருக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் திரு.ஷண்முகம்-திருமதி.சர்மிளா தம்பதியின் மகன் ரோகித் சண்முகம் ஆகியோரின் திருமணம் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ரேடிசன் ஓட்டலில் திங்கட்கிழமை நடைபெற்றது. திருமண விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் திரு.மணிஷ்தக்கர்,திருமதி.சசிரேகா,திரு.பிரசாந்த் தக்கர் மற்றும் திரு.ஷண்முகம்,திருமதி.சர்மிளா,டாக்டர் ரித்திகா ஷண்முகம் ஆகியோர் வரவேற்றனர்.திருமண விழாவில் உயர் அதிகாரிகள், டாக்டர்கள்,முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.